நல்வரவு GOOGLEYOUNG உங்கள் அணைவரையும் அன்புடன் வரவேற்கின்றது...!

Google YOUNG
உங்கள் அணைவரையும் அன்புடன் வரவேற்கின்றது...
நாங்கல்லாம் மோசமானவங்கள்ளையே முக்கியமானவங்க

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 5 மே, 2010


அஜீத்... புதுப்பட அறிவிப்பு?





மலேசியா, லண்டன், மொராக்கோ என தொடர்ந்து சர்வதேச பார்முலா பந்தயங்களில் பங்கேற்று வந்த அஜீத், ரேஸுக்கு ஒரு சின்ன இடை வெளி விட்டு, சென்னை திரும்பியுள்ளார்.
Ajith Kumar

இரு தினங்கள் மட்டும் தங்கும் அஜீத், தனது அடுத்த புதுப்படங்கள் குறித்த விவாதத்தில் பங்கேற்கிறார்.

தொடர்ச்சியாக பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் பங்கேற்று வந்த அஜீத்குமார், இன்று சென்னை திரும்பியுள்ளார்.

இந்த முறை இரு படங்களில் நடிக்கப்போகிறாராம் அஜீத். ஒரு படத்தை இயக்கப் போகிறவர் கவுதம் மேனன். தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி. இதன் ஸ்கிரிப்ட் பணிகள் அனைத்தும் முடிந்த நிலையில், அதன் இறுதிக்கட்ட ஆலோசனையில் ஈடுபடுகிறார். ரேஸ் முடித்துவிட்டு அஜீத் சென்னை வரும்போது, படப்பிடிப்புக்குத் தயாராக இருப்பார் கவுதம்.

இன்னொரு படத்தை பொல்லாதவன் படம் இயக்கிய வெற்றிமாறன் இயக்குவார் என்கிறது அஜீத் தரப்பு. ஆனால் வெற்றி மாறனா, வேறு இயக்குநரா என்பதில் ஒரு முடிவுக்கு வரவில்லையாம். அஜீத்தை அவரும் இந்த முறை சந்தித்துப் பேச உள்ளாராம்.

எல்லாம் சரியாக வந்தால், இந்த இரு படங்களையும் சேர்த்தே அறிவித்துவிட்டு, மீண்டும் இத்தாலி ரேஸுக்கு செல்வார் அஜீத் என்கிறார்கள். மொத்தம் 15 கார் பந்தயங்களில் பங்கேற்க உள்ள அஜீத், செப்டம்பரில்தான் மீண்டும் சினிமாவுக்கு திரும்புகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக