
இந்திய டிவிட்டர்வெளியின் மிகப் பெரிய செய்தி இன்று வெளியாகி இருக்கிறது. சச்சின் ரமேஷ் டெண்டுல்கர் டிவிட்டரில் அடியெடுத்து வைத்திருக்கிறார்.
குறும் வலைப்பதிவு சேவையான டிவிட்டரில் எத்தனையோ பிரபலங்கள் செயல்பட்டு வருகின்றனர். வருங்காலத்தில் மேலும் பல பிரபலங்கள் டிவிட்டர் அருமையை உணர்ந்து இந்த சேவையை பயன்படுத்த துவங்கலாம் என்றாலும், இந்திய கிரிக்கெட்டின் கடவுள் என்று வர்ணிக்கப்படும் சச்சின் டிவிட்டரில் அடியெடுத்து வைத்திருப்பதற்கு நிகரான மாபெரும் நிகழ்வு இல்லையென்றே சொல்ல வேண்டும். இந்திய டிவிட்டர்வெளி இனி முன்போல இருக்காது என்று செய்தித்தளம் ஒன்று சச்சினின் டிவிட்டர் பிரவேசத்தை வர்ணித்துள்ளது. அது உண்மைதான். சச்சினின் வருகைக்கு பிறகு இந்திய டிவிட்டர்வெளியில் பல மாற்றங்களை காணலாம். குறிப்பாக டிவிட்டர் மேலும் பிரபலமாகலாம். பாலிவுட் இயக்குனர் கரண் ஜோகர், பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான், அழகு தேவதை ஷில்பா ஷெட்டி என டிவிட்டரில் இந்திய பிரபலங்கள் கணிசமாகவே இருக்கின்றனர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக